முகவரிகள் அழிந்த பொதிகள் தொடர்பான தகவல்களை வழங்க மலேசியா இணக்கம் 

முகவரிகள் அழிந்த பொதிகள் தொடர்பான தகவல்களை வழங்க மலேசியா இணக்கம் 

முகவரிகள் அழிந்த பொதிகள் தொடர்பான தகவல்களை வழங்க மலேசியா இணக்கம் 

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2020 | 9:13 am

Colombo (News 1st) கடல் மார்க்கமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள முகவரிகள் அழிந்துள்ள பொதிகள் குறித்த தகவல்களை வழங்குவதற்கு மலேசியா இணக்கம் தெரிவித்துள்ளது.

பொதிகள் குறித்த ஏனைய தகவல்களை மலேஷியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கடல் மார்க்கமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள 45,000 பொதிகளில் 37,000 இற்கும் அதிகமான பொதிகளில் முகவரிகள் அழிந்துள்ளதாக தபால் மா அதிபர் கூறினார்.

மலேஷியா ஊடாக குறித்த பொதிகள் தொடர்பான முகவரிகள் கிடைத்ததன் பின்னர், அதன் உரிமையாளர்களிடம் அவற்றை கையளிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்