ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் 71 ஆவது பிறந்தநாள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் 71 ஆவது பிறந்தநாள் இன்று

by Staff Writer 20-06-2020 | 3:47 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று தனது 71 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். 1949 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி மாத்தறை மாவட்டத்தின் கலாட்டுவ பகுதியில் பிறந்த கோட்டாபய ராஜபக்ஸ, கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலைக் கல்வியின் பின்னர் கெடட் அதிகாரியாக 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட அவர், 1972 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி இரண்டாவது லெப்டினனாக தமது கடமையை ஆரம்பித்தார். 21 வருடங்கள் இராணுவத்தில் சேவையாற்றிய கோட்டாபய ராஜபக்ஸவின் சேவையைப் பாராட்டி அவருக்கு ரணவிக்ரம, ரணசூர உள்ளிட்ட முக்கிய பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டு முதல் அவர் பாதுகாப்புச் செயலாளராக நாட்டிற்கு சேவையாற்றினார். 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்ஸ இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாகத் தெரிவானார்.