கொரோனாவிலிருந்து மேலும் 26 பேர் குணமடைந்துள்ளனர்

கொரோனாவிலிருந்து மேலும் 26 பேர் குணமடைந்துள்ளனர்

by Staff Writer 20-06-2020 | 4:40 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 26 பேர் இன்று குணமடைந்துள்ளனர். நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1472 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,950 ஆக பதிவாகியுள்ளது. தொற்றுக்குள்ளானவர்களில் 467 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.