பொதுத்தேர்தலுக்கு எவ்வளவு நிதி செலவாகும்?

பொதுத்தேர்தலுக்கு எவ்வளவு நிதி செலவாகும்?

எழுத்தாளர் Bella Dalima

20 Jun, 2020 | 8:23 pm

Colombo (News 1st) எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு எவ்வளவு நிதி செலவாகும் என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆனையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் இன்று வினவினர்.

தற்போது வரையில், தேர்தலுக்கு அவசியமான நிதி தொடர்பில் உறுதியாகக் கூற முடியாது என சமன் ஶ்ரீ ரத்நாயக்க பதிலளித்தார்.

COVID-19 தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் வழங்கியுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளதால், எவ்வளவு செலவாகும் என்பதை தீர்மானிக்க முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் செலவாகும் நிதி தொடர்பில் மதிப்பீடு செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வௌியிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்