பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் ஹங்வெல்லயில் கைது

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் ஹங்வெல்லயில் கைது

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் ஹங்வெல்லயில் கைது

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2020 | 3:59 pm

Colombo (News 1st) பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஹங்வெல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து T-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ரவைகளும் வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, கத்திகள் மற்றும் 150 மில்லிகிராம் கஞ்சா ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகம – மகுல்பொக்குன பகுதியை சேர்ந்த 34 வயதான ‘புய்ட்டா’ என்ற சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழுவை சேர்ந்த ஒருவருடன் தொடர்பினை ஏற்படுத்தி, பொதுமக்களிடம் சந்தேகநபர் கப்பம் பெறுவதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

கொள்ளைச் சம்பவங்கள், மரண அச்சுறுத்தல் விடுத்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்கள் தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக கம்பஹா மற்றும் வெலிசறை நீதிமன்றங்களில் பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபரை வெலிசறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்