by Staff Writer 20-06-2020 | 3:52 PM
Colombo (News 1st) கொரானா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா மற்றும் லண்டனில் சிக்கியிருந்த 254 பேர் இன்று நாடு திரும்பினர்.
இந்தியாவில் சிக்கியிருந்த 194 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்.
மும்பையில் இருந்து 44 பேரும் சென்னையில் இருந்து 150 பேரும் இன்று அதிகாலை நாட்டிற்கு அழைத்துவரப்பட்டதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார்.
இதேவேளை, லண்டனில் இருந்து 60 பேர் இன்று நாட்டை வந்தடைந்தனர்.
நாடு திரும்பியோர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.