by Staff Writer 19-06-2020 | 5:36 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1948 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 491 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 25 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1446 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, வௌிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களில் 21 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
மார்ச் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வௌிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களில் சுமார் 1700 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கள ரந்தெனிய குறிப்பிட்டார்.