by Staff Writer 19-06-2020 | 8:35 PM
Colombo (News 1st) 5000 ரூபா கொடுப்பனவிற்காக தாம் அலைக்கழிக்கப்படுவதாகவும் முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் ஹட்டன் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கொடுப்பனவை பெற்றுக்கொள்ள வருமாறு அழைப்பு விடுக்கப்படுவதாகவும் சமுர்த்தி அலுவலகத்திற்கு சென்ற பின்னர் மற்றுமொரு நாளில் வருமாறு அறிவிக்கப்படுவதாகவும் ஹட்டன் மக்கள் தெரிவித்தனர்.
5000 ரூபா கொடுப்பனவைப் பெற ஹட்டன் சமுர்த்தி அலுவலகத்திற்கு இன்றும் மக்கள் சென்றுள்ளனர்.
எனினும், நூறு பேருக்கு மாத்திரமே கொடுப்பனவு வழங்க முடியும் என சமுர்த்தி உத்தியோகத்தர் அறிவித்ததாக நியூஸ்ஃபெஸ்ட் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேற்கொள்ளப்பட்ட முடக்கத்தால் பொருளாதார ரீதியில் பின்னடைவு ஏற்பட்தால் கடந்த 2 மாதங்களும் 5000 ரூபா கொடுப்பனவை அரசாங்கம் வழங்கியது.
எனினும், 5000 ரூபா கொடுப்பனவு உரிய முறையில் கிடைக்கவில்லை என தொடர்ந்தும் சில பகுதிகளின் மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.