வட மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளை பிரதமர் கண்காணித்தார்

by Staff Writer 19-06-2020 | 8:50 PM
Colombo (News 1st) வட மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளின் முன்னேற்றத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று கண்காணித்தார். மீரிகம - மதுரபிட்டியவிலிருந்து மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரதமர் இன்று காலை பிரவேசித்தார். மீரிகம - ரிலவுலுவ கட்டத்தின் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கும் மத்திய நிலையத்தைக் கண்காணித்த பிரதமர், வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் கேட்டறிந்தார். நான்கு வீதிகளையும், ஆறு வழிமாறல் மத்திய நிலையங்களையும் கொண்ட மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகள் 30 மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். காணி சுவீகரிப்பு உரிய முறையில் இடம்பெறாமல் ஒப்பந்தம் வழங்கப்பட்டமை இந்தத் திட்டம் தாமதமானமைக்கு ஓர் காரணம் என இதன்போது திட்டப் பணிப்பாளர் பிரதமரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அலவ்வ மஹபரச்சிமுல்ல பகுதியிலுள்ள ஷாந்த பண்டாரவின் வீட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பிரதமர் கலந்துகொண்டார்.

ஏனைய செய்திகள்