கற்கடதீவில் 6 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா கைப்பற்றல்

கற்கடதீவில் 6 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா கைப்பற்றல்

கற்கடதீவில் 6 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா கைப்பற்றல்

எழுத்தாளர் Bella Dalima

19 Jun, 2020 | 4:32 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் கற்கடதீவில் 6 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கற்கடதீவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 58 கிலோகிராம் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை அறிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளக்கஞ்சா கொண்டுவரப்பட்ட டிங்கி படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரளக்கஞ்சாவையும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்