இந்த வருட இறுதியில் கொரோனா தடுப்பு மருந்துகளைத் தயாரிக்க முடியுமென உலக சுகாதார ஸ்தாபனம் நம்பிக்கை

இந்த வருட இறுதியில் கொரோனா தடுப்பு மருந்துகளைத் தயாரிக்க முடியுமென உலக சுகாதார ஸ்தாபனம் நம்பிக்கை

இந்த வருட இறுதியில் கொரோனா தடுப்பு மருந்துகளைத் தயாரிக்க முடியுமென உலக சுகாதார ஸ்தாபனம் நம்பிக்கை

எழுத்தாளர் Bella Dalima

19 Jun, 2020 | 4:44 pm

Colombo (News 1st) இந்த வருட இறுதியில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகளைத் தயாரிக்க முடியுமென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

COVID-19 தொற்றுக்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனினும் உலகளாவிய ரீதியில் மருந்து கண்டுபிடிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி செளம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் 200-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 10 மருந்துகள் , மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆகவே, இந்த வருட இறுதிக்குள் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட மருந்துகள் தயாரிக்கப்படுமென்பதில் தாம் நம்பிக்கையுடன் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி செளம்யா சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

COVID-19 தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் எத்தனை தோல்விகளைக் கண்டாலும் நம்பிக்கையை கைவிடாமல் முன்நோக்கி செல்வது அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் 8.6 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், 4 ,57,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும், 45 ,58,000 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்