42,000 வௌிநாட்டுப் பொதிகளுக்கான உரிமையாளர்களைக் கண்டுபிடிக்க முடியாதுள்ளதாக தகவல்

by Staff Writer 18-06-2020 | 8:29 PM
Colombo (News 1st) தபால் மூலமாக வௌிநாடுகளில் இருந்து வந்த 42,000 பொதிகளுக்கான உரிமையாளர்களைக் கண்டுபிடிக்க முடியாதுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வௌிக்கொணரப்பட்டது. கடந்த காலங்களில் உலகளாவிய ரீதியில் விமான நிலையங்கள் மூடப்பட்டன. அதனால் விமானம் மூலம் அனுப்பும் பொதிகளை கப்பல்களில் அனுப்பியிருந்தனர். கொள்கலனொன்றில் பலருக்கு சொந்தமான 42,000 பொதிகள் உள்ளன. கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டமையால், பொதிகள் நீரில் நனைந்துள்ளன. அதனால் அவற்றில் முகவரிகள் இல்லை என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். சீனா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து அவை வந்துள்ளதாகவும் BARCODE-ஐ பயன்படுத்தி முகவரியை கண்டுபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் பந்துல குணவர்தன கூறினார். எவ்வாறாயினும், இது தபால் திணைக்களத்தின் தவறு அல்லவென அவர் குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்