by Staff Writer 18-06-2020 | 4:21 PM
Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட நான்கு பேரிடம் முறிகள் மோசடி தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக செயற்பட்ட எஸ்.பாஸ்கரலிங்கம் மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் பொது முகாமையாளர் வசந்த குமார் ஆகியோரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இந்த விடயம் தொடர்பில் அறிவித்துள்ளார்.
முறிகள் மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக வாக்குமூலம் பதிவு செய்யுமாறே ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பாளர் , அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.