by Staff Writer 18-06-2020 | 2:14 PM
Colombo (News 1st) 'குடு திலான்' என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
274.68 கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டிற்கே பிரதிவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி பத்தரமுல்ல பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.