துபாயிலிருந்து 290 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

துபாயிலிருந்து 290 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

துபாயிலிருந்து 290 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2020 | 7:01 am

Colombo (News 1st) துபாயிலிருந்து 290 இலங்கையர்கள் இன்று (18) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவையின் விசேட விமானம் மூலம் இவர்கள் நாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 120 கர்ப்பிணி தாய்மார்களும் அடங்குவதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் இவர்களுக்கான PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேநேரம், மடகஸ்கார், உகண்டா மற்றும் இந்தியாவிலிருந்தும் மேலும் சிலர், அடுத்த வாரத்தில் நாடு திரும்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்