ஐ.நா. பாதுகாப்பு பேரவையின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தெரிவு

ஐ.நா. பாதுகாப்பு பேரவையின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தெரிவு

ஐ.நா. பாதுகாப்பு பேரவையின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தெரிவு

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2020 | 9:38 am

Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைக்கான 15 நாடுகளை தெரிவுசெய்யும் தேர்தல் நடைபெறுகின்றது.

நேற்று (17) முதல் இடம்பெற்று வரும் வாக்கெடுப்பில் மெக்ஸிக்கோ, இந்தியா, அயர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகள் தெரிவாகியுள்ளன.

மெக்ஸிக்கோவும் இந்தியாவும் எதிர்ப்பின்றி ஏகமனதாக தெரிவாகியுள்ளன.

எனினும் கனடாக தமது வாக்கெடுப்பில் தோல்வியடைந்து ஆசனத்தை இழந்துள்ளது.

அடுத்த 2 வருடங்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் அங்கம் வகிக்கக்கூடிய 15 நாடுகளை ஐக்கிய நாடுகளின் 193 நாடுகள் தெரிவு செய்ய வேண்டும்.

இந்நிலையில் நேற்று வாக்களிப்பில் கலந்துகொள்ளாத ஏனைய நாடுகள் இன்று வாக்களிக்கவுள்ளன.

அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் 2 வருடங்களுக்கு குறித்த 15 நாடுகளும் பாதுகாப்பு பேரவையின் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

75 ஆவது பாதுகாப்பு பேரவையின் தலைவராக துருக்கிய இராஜதந்திரியான Volkan Bozkir ஏகமனதாக தெரிவாகியுள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்