மலையகத்தில் அதிகரித்து வரும் குளவிக் கொட்டு சம்பவங்கள்

by Staff Writer 17-06-2020 | 8:00 PM
Colombo (News 1st) மலையகத்தில் நாளுக்கு நாள் குளவிக் கொட்டுக்கு மக்கள் இலக்காகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பொகவந்தலாவையில் இன்று பலர் குளவிக் கொட்டுக்கு இலக்கானதுடன், மூவர் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொட்டியாகலை தோட்டத்தில் 10 தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கானதுடன், அவர்களில் 9 பேர் தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பொகவந்தலாவை ஃப்ரீட்லேன்ட் தோட்டத்தில், பாதையில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார். லிங்க்போர்ட் தோட்டத்தில் தொழிலுக்கு சென்றுகொண்டிருந்த இருவர் குளவிக் கொட்டுக்கு இலக்கானதுடன் ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். காயமடைந்த மற்றைய தொழிலாளர் வௌிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வௌியேறியுள்ளார். இதேவேளை, மலையகத்தில் இந்த வருடத்தில் மாத்திரம் குளவிக் கொட்டுக்கு இலக்காகி நால்வர் பலியாகியுள்ளனர். கடந்த 6 மாதங்களில் நூற்றுக்கு மேற்பட்டோர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.

ஏனைய செய்திகள்