ஒத்துழைப்பு வழங்கினால் மஹிந்த அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கலாம்: சீனிதம்பி யோகேஸ்வரன்

by Staff Writer 17-06-2020 | 8:54 PM
Colombo (News 1st) அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தேர்தல் மேடைகளில் தற்போது மீண்டும் பேசப்படுகிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காவிடின் பாராளுமன்றத்தை சட்டவாக்க சபையாக மாற்றி அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கருத்து வௌியிட்டிருந்தார். இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தற்போது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான இயலுமை தொடர்பில் கருத்து வௌியிட்டு வருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இது தொடர்பில் இன்று கருத்துத் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை யார் தீர்ப்பது? எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றவர்கள், எங்களது நோக்கத்தை நிறைவேற்றுகின்ற பாதையில் எங்களுக்கு ஆதரவை தருகின்றவர்களோடு நாங்கள் பேசுவதற்கு எப்போதும் தயாராக இருக்கின்றோம். அந்த வகையில் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் தேர்தலின் பின் ஆட்சியமைப்பார்களாக இருந்தால், தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்கின்ற புதிய அரசியல் யாப்பு விடயத்தில் கூடிய அக்கறையக் காட்டுகின்ற செயற்பாட்டிற்கு முன்வந்து, பூரண ஒத்துழைப்பை தர முன்வருவார்களாக இருந்தால், அவர்களது அரசாங்கத்திற்கு கூட நாங்கள் ஆதரவை தெரிவிக்கக்கூடிய சூழல் உருவாகும்