உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிவாரணம் 

உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்

by Staff Writer 17-06-2020 | 8:05 AM
Colombo (News 1st) கொரோனா தொற்றின் காரணமாக நிதி நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா தொற்றினால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதால் 50 வீதமான உள்ளூராட்சி மன்றங்கள் நிதி நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் 347 உள்ளூராட்சி நிறுவனங்கள் காணப்படுகின்றன. குறித்த உள்ளூராட்சி நிறுவனங்கள் எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடிகள் தொடர்பிலான அறிக்கையை துரிதமாக சமர்ப்பிக்குமாறு உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கைகள் கிடைக்கப்பெற்றவுடன் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.