பிள்ளைகளுக்கு ஆபத்தான நாடு ஆப்கானிஸ்தான் – ஐ.நா. சபை

பிள்ளைகளுக்கு ஆபத்தான நாடு ஆப்கானிஸ்தான் – ஐ.நா. சபை

பிள்ளைகளுக்கு ஆபத்தான நாடு ஆப்கானிஸ்தான் – ஐ.நா. சபை

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2020 | 2:03 pm

Colombo (News 1st) பிள்ளைகள் வாழ்வதற்கு ஆபத்தான நாடாக ஆப்கானிஸ்தான் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் சுமார் 3,000 இற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் தேர்தலில் பல வன்முறை சம்பவங்கள் நடைப்பெற்றுள்ளன.

இதில் பெரும்பாலான தாக்குதல்கள் தலிபான்களால் நடத்தப்பட்டுள்ளன.

அரச படைகளின் தாக்குதல்களாலும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அவர்களது நிபந்தனைகளை ஏற்பதாக அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கனி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

Covid – 19 தொற்றுக்குள்ளாகி 20,000 இற்கும் மேற்பட்டோர் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்