இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமனம் 

by Staff Writer 17-06-2020 | 11:30 AM
Colombo (News 1st) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுச் செயலாளராக இருந்த அனுஷா சிவராஜா கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொருளாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் இந்தத் தகவலை நியூஸ்பெஸ்ட்டுக்கு உறுதிப்படுத்தினார். கொட்டகலை C.L.F. வளாகத்தில் இன்று (17) இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பேராளர் மாநாட்டின் போது நிர்வாக சபையின் ஆலோசனையின் பிரகாரம் இந்த புதிய தெரிவுகள் இடம்பெற்றுள்ளன. மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வகித்த தலைவர் பதவியை தொடர்ந்தும் வெற்றிடமாக வைப்பதற்கு இன்றைய கூட்டத்தின்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.      

ஏனைய செய்திகள்