by Bella Dalima 16-06-2020 | 5:28 PM
Colombo (News 1st) ETI நிறுவனத்தின் 4 பணிப்பாளர்களுக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.
வழக்கு விசாரணையில் ஆஜராகத் தவறியமையால் 4 பணிப்பாளர்களுக்கும் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இன்று பிடியாணை பிறப்பித்தார்.
ETI நிறுவனத்தின் வைப்பாளர்களின் பணத்தை மீள செலுத்தாமைக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ETI நிறுவனத்தில் நிதி வைப்பிலிட்ட 3 பேரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, ETI நிறுவனத்தின் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, மாலக்க எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க ஆகியோருக்கு பிடியாணை பிறப்பித்து மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.