கிண்ணியாவில் சட்டவிரோத மணல் அகழ்வு; எண்மர் கைது

by Staff Writer 16-06-2020 | 1:46 PM
Colombo (News 1st) திருகோணமலை - கிண்ணியா, மணலாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (16) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களின் 4 டிப்பர்களும் 4 உழவு இயந்திரங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிண்ணியா பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.