மணல் கொண்டு செல்வதற்கான அனுமதிப் பத்திரத்தை சோதனைக்குட்படுத்த வேண்டாம் என அறிவிப்பு 

மணல் கொண்டு செல்வதற்கான அனுமதிப் பத்திரத்தை சோதனைக்குட்படுத்த வேண்டாம் என அறிவிப்பு 

எழுத்தாளர் Bella Dalima

16 Jun, 2020 | 4:11 pm

Colombo (News 1st) அரசினால் கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் வரை , மணல் கொண்டு செல்வதற்கான அனுமதிப் பத்திரத்தை சோதனைக்குட்படுத்த வேண்டாம் என பதில் பொலிஸ் மா அதிபர் சி.ரி.விக்ரமரத்ன அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார்.

இதேவேளை, கனிய வளங்களை ஏற்றிச்செல்வதற்கு தேவையான அனுமதிப் பத்திர நடைமுறையை ஜுன் முதலாம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்திற்கு இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்