தனியார் பஸ்களில் அதிக பயணிகள் ஏற்றப்படுவதாக முறைப்பாடு

தனியார் பஸ்களில் அதிக பயணிகள் ஏற்றப்படுவதாக முறைப்பாடு

தனியார் பஸ்களில் அதிக பயணிகள் ஏற்றப்படுவதாக முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

16 Jun, 2020 | 8:36 am

Colombo (News 1st) தனியார் பஸ்கள் சிலவற்றில் ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு செயற்படும் தனியார் பஸ்கள் தொடர்பில் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாட்டை முன்வைக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம், கமாண்டர் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கிடைக்கும் முறைப்பாடுகள் அனைத்தும் மேல் மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபைக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பஸ்களில் ஆசனங்களை விட அதிக பயணிகளை ஏற்றிச்செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்