குரண பகுதியில் ஹெரோயினுடன் கைதானவரை தடுத்து வைத்து விசாரிக்குமாறு உத்தரவு

குரண பகுதியில் ஹெரோயினுடன் கைதானவரை தடுத்து வைத்து விசாரிக்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

16 Jun, 2020 | 3:12 pm

Colombo (News 1st) கட்டுநாயக்க – குரண பகுதியில் 6 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நபரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நேற்றிரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 06 கிலோ 137 கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 6 கோடி ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.

குரண பகுதியை சேர்ந்த மின் இணைப்பாளராக கடமையாற்றும் 45 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறத்த நபர் துபாயில் தொடர்பினைக் கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதுடன், இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்