கிண்ணியாவில் சட்டவிரோத மணல் அகழ்வு; எண்மர் கைது

கிண்ணியாவில் சட்டவிரோத மணல் அகழ்வு; எண்மர் கைது

எழுத்தாளர் Staff Writer

16 Jun, 2020 | 1:46 pm

Colombo (News 1st) திருகோணமலை – கிண்ணியா, மணலாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (16) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களின் 4 டிப்பர்களும் 4 உழவு இயந்திரங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்