by Staff Writer 16-06-2020 | 10:17 AM
Colombo (News 1st) உமா ஓயா பல்நோக்கு திட்ட நிர்மாணப் பணிகளுக்காக ஈரானிலிருந்து 85 தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
நேற்று (15) மாலை இவர்கள் நாட்டை வந்தடைந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் PCR பரிசோதனையின் பின்னர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
உமா ஓயா பல்நோக்கு திட்ட நிர்மாணப்பணிகள் 95 வீதம் நிறைவடைந்துள்ள நிலையில், ஏனைய பணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் நிறைவுசெய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.