ஆஸ்கார் விருது விழா மேலும் 2 மாதங்களுக்கு பிற்போடப்பட்டது

ஆஸ்கார் விருது விழா மேலும் 2 மாதங்களுக்கு பிற்போடப்பட்டது

ஆஸ்கார் விருது விழா மேலும் 2 மாதங்களுக்கு பிற்போடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

16 Jun, 2020 | 10:07 am

Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த வருடத்தின் ஆஸ்கார் நிகழ்வு மேலும் 2 மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.

40 வருடங்களின் பின்னர் ஆஸ்கார் விருது வழங்கும் விழா பிற்போடப்பட்டுள்ளதுடன், 93 ஆவது நிகழ்வு ஏற்கனவே திட்டமிட்டவாறு இம்முறை நடைபெறாது என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம் ஆஸ்கார் விருது வழங்கல் விழா அடுத்த வருடம் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்கு முன்னர் ஆஸ்கார் விழா 1938, 1968 மற்றும் 1981 ஆம் ஆண்டுகளில் பிற்போடப்பட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்