அடக்குமுறை கொள்கைகளுக்கு எதிர்ப்பு: மீண்டும் லிப்டன் சுற்றுவட்டம் அருகில் ஆர்ப்பாட்டம்

அடக்குமுறை கொள்கைகளுக்கு எதிர்ப்பு: மீண்டும் லிப்டன் சுற்றுவட்டம் அருகில் ஆர்ப்பாட்டம்

அடக்குமுறை கொள்கைகளுக்கு எதிர்ப்பு: மீண்டும் லிப்டன் சுற்றுவட்டம் அருகில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

16 Jun, 2020 | 9:03 pm

Colombo (News 1st) அமெரிக்க பொலிஸாரின் தற்போதைய செயற்பாடுகள் அவர்களின் ஆதிக்கத்தை எடுத்தியம்புகின்றன.

ஜோர்ஜ் ஃப்ளொய்ட் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மற்றுமொருவர் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான அடக்குமுறை செயற்பாடுகள், MCC, ACSA மற்றும் SOFA போன்ற உடன்படிக்கைகளின் ஊடாக எமது நாட்டிலும் இடம்பெறக்கூடும் என பல தரப்பினர் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் அழுத்தத்தை தடுக்கும் வகையில், முன்னிலை சோசலிசக் கட்சி முன்னெடுத்த முயற்சி, பொலிஸாரின் கைது நடவடிக்கைகள் காரணமாக இடைநடுவில் நிறுத்தப்பட்டது.

லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று மீண்டும் கூடிய முன்னிலை சோசலிசக் கட்சியினர் உள்ளிட்ட தொழிற்சங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இந்த அடக்குமுறை கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்