அமெரிக்க முன்னாள் வீரர் ஒருவருக்கு 16 வருட சிறை

ரஷ்யாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் அமெரிக்காவின் முன்னாள் வீரருக்கு 16 வருட சிறை

by Staff Writer 15-06-2020 | 4:15 PM
Colombo (News 1st) ரஷ்யாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் அமெரிக்க கடற்படையின் முன்னாள் வீரரான Paul Whelan க்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தொடர்பான இராஜதந்திர இரகசியங்கள் உள்ளடங்கிய USB தகவல் சேமிப்பு கருவியுடன் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் 18 மாதங்களுக்கு முன்னர் அவர் கைது செய்யப்பட்டார். வகைப்படுத்தப்பட்ட தகவல்களை பெற்றுக்கொண்டதாக மொஸ்கோ நீதிமன்றம் குற்றஞ்சுமத்தியுள்ளது. பிரித்தானியா, கனடா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் குடியுரிமை பெற்றுள்ள வீலன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், சுற்றுலா புகைப்படங்களே குறித்த தகவல் சேமிப்புக்கருவியில் உள்ளதென தான் நினைத்திருந்ததாக கூறியிருந்தார். அமெரிக்க கடற்படையின் முன்னாள் வீரரான Paul Whelan க்கு தண்டனை வழங்கப்பட்டால் அது அமெரிக்கா - ரஷ்யா இடையேயான உறவை பாதிக்கும் என ரஷ்யாவுக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் John J Sullivan தெரிவித்திருந்தார்.