முல்லைத்தீவில் இன்று மாதிரி தேர்தல் முன்னெடுப்பு

முல்லைத்தீவில் இன்று மாதிரி தேர்தல் முன்னெடுப்பு

by Staff Writer 15-06-2020 | 7:42 PM
Colombo (News 1st) பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று (15) முல்லைத்தீவு மாவட்டத்தில் மாதிரி தேர்தல் நடத்தப்பட்டது. வன்னி தேர்தல் தொகுதிக்கான மாதிரி தேர்தல் முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் இந்து தமிழ் கலவன் வித்தியாலயத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை 10 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை நடைபெற்ற இந்த ஒத்திகை வாக்களிப்பின் போது வாக்களிப்பு நிலையம் தொற்று நீக்கப்பட்டு சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்ட அரசாங்க அதிபருமான க. விமலநாதன் தலைமையில் நடைபெற்ற தேர்தலை, தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாயளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் ஆகியோர் மேற்பார்வை செய்தனர். ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த 124 வாக்காளர்கள் ஒத்திகையின் போது வாக்களித்திருந்தனர்.
ஒரு நிமிடத்துக்கு ஒரு ஆள் என்பது அது நல்லதில்லை ஒரு நிமிடத்துக்கு இரண்டு பேர் வாக்களிக்கலாம் என்றால் அது ஒரு நல்ல விளைவாக அமையும். எங்களுக்கு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வளைவுகள் வந்திருக்கின்றன இங்கு கொஞ்சம் மெதுவாக ஒரு நிமிடத்துக்கு ஒராள் என்ற படி நடக்கின்றது அப்படியென்றால் 800 பேர் கொண்ட ஒரு வாக்குச்சாவடியில் 800 நிமிடம் என்றால் அது சரிவராது. ஏனென்றால் தேர்தல் ஒருநாள் ஆரம்பித்து அதே நாள் முடித்துவிட வேண்டும். எந்தக் கட்சிக்கென்றாலும் பரவாயில்லை எல்லாரும் வாக்களிக்க வேண்டும் அது உண்மையான ஒரு ஜனநாயக முடிவைக் காட்டும் குறிப்பாக ஒரு முகாமில் மறிக்கப்பட்டிருக்கின்ற தொற்று நோய்காரர்களுக்கு அவர்களுக்குரிய பதிவு வெவ்வேறு வட்டாரங்களில் இருக்கும் எப்படி வாக்களிக்க விடுவது எப்படி அவர்களுடைய பதிவுகளை எடுத்து அந்த வாக்கு நிலையத்தில் பார்த்து இவர் வாக்களிக்கத் தகுந்தவரா என அறிந்த பிறகுதான் வாக்களிக்க முடியும்
என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர், பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்கள் அந்த வழிமுறைகளை முறையாக கையாள்கின்றார்களா என்பது தொடர்பில் கண்காணிக்கப்பட்டது. மாதிரி தேர்தலின் போது கிடைக்கும் அனுபவத்தை அடிப்படையாக கொண்டு ஆகஸ்ட் 5ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களை அமைத்து, வாக்களிப்பு நிலையங்களுக்கு வௌியே முகக்கவசம் அணிவது சமூக இடைவௌியை பேணுவது மற்றும் கைகளை சுத்தப்படுத்துவது ஆகிய விடங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாகவே ஆராயப்படுகிறது
என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.