அமெரிக்க போர் விமானம் விபத்திற்குள்ளானது

அமெரிக்க போர் விமானம் விபத்திற்குள்ளானது: விமானி மாயம்

by Staff Writer 15-06-2020 | 4:58 PM
Colombo (News 1st) அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான போர் விமானமொன்று வட கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 48 ஆவது போர் பிரிவின், F-15C Eagle என்ற போர் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், விமானி ஒருவர் மாத்திரம் காணாமல் போயுள்ளதை அமெரிக்க விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.