கண்டி பொலிஸ் நிலைய மதிலில் மோதிய லொறி ; ஒருவர் உயிரிழப்பு

கண்டி பொலிஸ் நிலைய மதிலில் மோதிய லொறி ; ஒருவர் உயிரிழப்பு

கண்டி பொலிஸ் நிலைய மதிலில் மோதிய லொறி ; ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2020 | 3:15 pm

Colombo (News 1st) கண்டி – கட்டுகஸ்தோட்டை பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதிகாலை 4.10 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கட்டுகஸ்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து கண்டி பொலிஸ் நிலையத்தின் மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொறியில் பயணித்த மற்றுமொருவர் காயங்களுடன் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்