by Staff Writer 15-06-2020 | 4:24 PM
Colombo (News 1st) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வௌியேறும் பகுதி பொதுமக்களுக்காக இன்று (15) மீள திறக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் 12 மணி தொடக்கம் வரையரைகளுடன் வௌியேறும் பகுதி திறக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார்.
அதற்கமைய பயணி ஒருவருக்கு 3 பேரை விருந்தினர் பகுதிக்கு அழைத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 3 மாதங்களாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வௌியேறும் பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.