50 வீத வாக்குச் சீட்டு அச்சிடும் பணி நிறைவு

50 வீத வாக்குச் சீட்டு அச்சிடும் பணி நிறைவு

50 வீத வாக்குச் சீட்டு அச்சிடும் பணி நிறைவு

எழுத்தாளர் Staff Writer

14 Jun, 2020 | 1:45 pm

Colombo (News 1st) இம்முறை பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள், அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் நாட்களில் அச்சிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலுக்காக ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படவுள்ளன.

இவ்வாறு அச்சிடப்படவுள்ள வாக்குச் சீட்டுகளில் மிகவும் நீளமான வாக்குச் சீட்டு கம்பஹா மாவட்டத்திற்காக அச்சிடப்படவுள்ளது.

அகலமான வாக்குச் சீட்டு கொழும்பு, வன்னி, திகாமடுல்லை மற்றும் மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களுக்கு அச்சிடப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்