வரணி ஆலய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

வரணி ஆலய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

வரணி ஆலய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Staff Writer

14 Jun, 2020 | 8:10 am

Colombo (News 1st) வரணி வடக்கு – தம்பான் கும்பிட்டான்குள பிள்ளையார் ஆலயத்தில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய் – சங்கானையை சேர்ந்த நபரே இவ்வாறு மந்துவில் பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆலயத்தின் CCTV காட்சிகளை அடிப்படையாக வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருட்டுப்போனதாக கூறப்படும் சங்கிலி ஒன்றும் சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர் சம்பவத்துடன் தொடர்பற்றவர் என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 9ஆம் திகதி ஆலயத்தில் இருந்த ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் 45,000 ரூபா பணம் திருடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்