மரதன்கடவல பகுதியில் மஞ்சள் தூளில் கலப்படம் ; இருவர் கைது

மரதன்கடவல பகுதியில் மஞ்சள் தூளில் கலப்படம் ; இருவர் கைது

மரதன்கடவல பகுதியில் மஞ்சள் தூளில் கலப்படம் ; இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

14 Jun, 2020 | 1:07 pm

Colombo (News 1st) நுகர்வுக்கு உதவாத மஞ்சள் தூள் வர்த்தகம் தொடர்பில் மரதன்கடவல மற்றும் கொல்லன்குட்டிகம பகுதிகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆலையொன்றில் மஞ்சள் தூளுடன் கோதுமை மாவை கலக்கும் சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது நுகர்வுக்கு உதவாத 50 கிலோகிராம் மஞ்சள் தூள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நடவடிக்கை கடந்த பல நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த ஆலை சீல் வைக்கப்பட்டதுடன் சந்தேகநபர் இன்று (14) கெக்கிராவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்