நாட்டில் 1,887 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 1,887 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 1,887 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

14 Jun, 2020 | 7:04 am

Colombo (News 1st) Update; 14/06/2020: 1.10 PM: கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,887 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

——————————————————————————————————————————–

13/06/2020: 6.45 PM: இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,884 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் (13) 4 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கத்தாரிலிருந்து வந்து அம்பாறையில் தனிமைப்படுத்தப்பட்ட இருவர், முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்ட கடற்படையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் சென்னையிலிருந்து நாடு திரும்பிய ஒருவர் அடங்கலாக நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனப் பெண் உள்ளடங்கலாக இதுவரை 1,252 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 621 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்