அதிகமான விலையில் கோழி இறைச்சி விற்பனை  

அதிகமான விலையில் கோழி இறைச்சி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

by Staff Writer 13-06-2020 | 4:43 PM
Colombo (News 1st) கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் கோழி இறைச்சி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த திசாநாயக்க குறிப்பிட்டார். அதிக விலையில் கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தோல் உறிக்கப்படாத ஒரு கிலோகிராம் கோழி இறைச்சிக்கான நிர்ணய விலை 430 ரூபா எனவும் தோல் உறிக்கப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சிக்கான நிர்ணய விலை 500 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிர்ணய விலைக்கு அதிகமாக கோழி இறைச்சி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த திசாநாயக்க குறிப்பிட்டார்.