மாலைத்தீவில் சிக்கியிருந்த 291 இலங்கை பிரஜைகள் நாடு திரும்பினர்

மாலைத்தீவில் சிக்கியிருந்த 291 இலங்கை பிரஜைகள் நாடு திரும்பினர்

மாலைத்தீவில் சிக்கியிருந்த 291 இலங்கை பிரஜைகள் நாடு திரும்பினர்

எழுத்தாளர் Staff Writer

13 Jun, 2020 | 4:53 pm

Colombo (News 1st) மாலைத்தீவில் சிக்கியிருந்த இலங்கை பிரஜைகள் 291 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

நாட்டை வந்தடைந்தவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1880 ஆக பதிவாகியுள்ளது.

நேற்று பதிவாகிய 3 கொரோனா நோயாளர்களில் இருவர் கடற்படையை சேர்ந்தவர்கள் எனவும் மற்றையவர் கட்டாரிலிருந்து வருகை தந்தவர் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 673 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 1196 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்