by Staff Writer 12-06-2020 | 8:36 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை கிராமத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
கொலை செய்யப்பட்ட நிலையில் 60 வயதான குறித்த பெண் அவரது வீட்டில் இருந்து நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.
கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பிறைந்துரைச்சேனை உசன் வைத்தியர் வீதியில் வசித்து வந்த ஐந்து பிள்ளைகளின் தாயாரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது வீட்டில் தனியாக வசித்து வந்த குறித்த பெண் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நிதிமன்ற நீதிபதி H.M.M.பஸீல் சடலம் மீதான நீதவான் விசாரணைகளை முன்னெடுத்தார்.
சடலம் பிரேதப் பரிசோதனையின் பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேவேளை, சம்பவ தினத்தன்று குறித்த வீட்டில் இருந்த அலுமாரியும் உடைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
கொலைச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.