பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரிக்க குறைகேள் அதிகாரி நியமனம்

பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரிக்க குறைகேள் அதிகாரி நியமனம்

பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரிக்க குறைகேள் அதிகாரி நியமனம்

எழுத்தாளர் Staff Writer

12 Jun, 2020 | 5:12 pm

Colombo (News 1st) பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் குறைகளை விசாரித்து துரிதமாக தீர்வுகளை வழங்குவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் ஒம்புட்ஸ்மென் (Ombudsman) எனப்படும் குறைகேள் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க புதிய குறைகேள் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்வாக அதிகாரங்களை செயற்படுத்தும் போது அரச அதிகாரிகள் பொறுப்புக்களை துறந்து செயற்படுதல் அல்லது வரையறைகளை மீறி செயற்படுதல் தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகளை வழங்கும் நோக்கில் ஒம்புட்ஸ்மென் அலுவலகம் நிறுவப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் ஒம்புட்ஸ்மென், ஜனாதிபதி செயலகம், கொழும்பு 01 என்ற விலாசத்திற்கு தபால் மூலம் அல்லது நேரடியாக வருகை தந்து முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

இதேவேளை, 0112 33 80 73 என்ற ஃபெக்ஸ் இலக்கம் அல்லது [email protected] என்ற இணையத்தள முகவரியிலும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

பொதுமக்கள் தமது வாழ்க்கையை அமைதியாக முன்னெடுக்க தடையாக அமையும் பாரிய போதைப்பொருள் கடத்தல்கள், சுற்றாடல் பாதிப்புகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பிலும் முறையிட முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்