நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கி செயலிழப்பு

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கி செயலிழப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Jun, 2020 | 3:21 pm

Colombo (News 1st) நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கி செயலிழந்துள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனை திருத்துவதற்கு 5 நாட்கள் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார்.

கடந்த 10 ஆம் திகதி முதல் நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின் பிறப்பாக்கி தற்காலிகமாக இணைப்பிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16) முதல் நிலைமையை வழமைக்கு கொண்டு வருவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், மின்விநியோகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் மினசக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்