by Staff Writer 12-06-2020 | 3:06 PM
Colombo (News 1st) கொழும்பு - சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணியளவில் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
இராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் தொடர்பிலான நீதவான் விசாரணைகள் கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்னவினால் இன்று முற்பகல் முன்னெடுக்கப்பட்டன.