2020 ஒலிம்பிக் விழா எளிமையாக நடத்தப்படும்

2020 ஒலிம்பிக் விழா எளிமையாக நடத்தப்படும் - ஏற்பாட்டுக் குழு

by Staff Writer 11-06-2020 | 11:20 AM
Colombo (News 1st) 2020 ஒலிம்பிக் விழா மிக எளிமையாகவே நடத்தப்படும் என ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் Toshiro Muto தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, அடுத்த வருடம் ஜூலை மாதம் 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை ஒலிம்பிக் விழாவை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒலிம்பிக் விழா கோலாகலமாக நடத்தப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளது. எளிமையாகவும் குறைந்த செலவிலும் விழாக்களை நடத்துவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.