விசேட அதிரடிப்படையின் புதிய கட்டளை அதிகாரியாக பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர பொறுப்பேற்பு

by Staff Writer 11-06-2020 | 8:22 PM
Colombo (News 1st) விசேட அதிரடிப்படையின் புதிய கட்டளை அதிகாரியாக பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி வருண ஜயசுந்தர இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். விசேட அதிரடிப்படைத் தலைமையகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 2001ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி உதவி பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் இணைந்த ஜயசுந்தர, 2002ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப் படையில் இணைந்தார். விசேட அதிரடிப் படையில் 16 வருடங்கள் சேவையாற்றிய வருண ஜயசுந்தர, அதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக சேவையாற்றிய பின்னர், சாதாரண பொலிஸ் கடமைக்காக வடக்கிற்கு மாற்றப்பட்டார். கண்டி தர்மராஜ கல்லூரியின் பழைய மாணவரான அவர், புது டெல்லி, சிட்னி பல்கலைக்கழகங்களில் பட்டப்பின் படிப்பைப் பூர்த்தி செய்த திறமையான அதிகாரியாவார். விசேட அதிரடிப்படையில் புலனாய்வுப் பிரிவை வழிநடத்தி அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய சிறப்பும் அவருக்குள்ளது.