நயினை நாகபூசணி அம்மன் ஆலய திருவிழாவில் கட்டுப்பாடு

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தில் கட்டுப்பாடுகள்

by Staff Writer 11-06-2020 | 8:03 AM
Colombo (News 1st) வரலாற்றுப் புகழ் பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போது சில கட்டுப்பாடுகளை பின்பற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆலய பரிபாலன சபையினர் உள்ளிட்ட தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வருடாந்த உற்சவம் தொடர்பில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். இம்முறை நயினாதீவை தவிர்ந்த வௌி பிரதேச பக்தர்களுக்கு உற்சவத்தில் கலந்துகொள்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் இதன்போது குறிப்பிட்டார். இதேவேளை, இம்முறை மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழாவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மக்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஜி.ஏ. மோகன்ராசு தலைமையில், ஆடி மாத திருவிழாவுக்கான முன்னாயத்த கூட்டம் நேற்று நடைபெற்றது. இம்முறை திருவிழா திருப்பலி தொலைக்காட்சியில் நேரடியாக ஔிபரப்பப்படும் என மன்னார் மாவட்ட ஆயர் பேரருட்திரு இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.