சுற்றுலாத்துறையினருக்கு நிவாரணம்

சுற்றுலாத்துறையினருக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி

by Staff Writer 11-06-2020 | 11:00 AM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறையை சேர்ந்தவர்களுக்கான நிவாணங்களை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, சுற்றுலாலாத்துறையை சேர்ந்த 150,000 பேருக்கான நிவாரண வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ஹோட்டல் ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கான சம்பளத்தை வழங்குவதற்காக, குறைந்த வட்டியில் கடன் வழங்குதலும் குறித்த வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஹோட்டலில் பணியாற்றுபவர்களுக்கு மாதம் 20,000 ரூபா படி 6 மாதங்களுக்கு சம்பளம் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலா வழிகாட்டிகளுக்கு மாதம் 20,000 ரூபா வழங்கவும் சுற்றுலா சாரதிகளுக்கு மாதம் 15,000 ரூபா சம்பளம் வழங்கவும் நிவாரண திட்டத்தினூடாக ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.