அமெரிக்காவில் 2 மில்லியன் மக்களுக்கு கொரோனா தொற்று

அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 மில்லியனை கடந்தது

by Chandrasekaram Chandravadani 11-06-2020 | 11:44 AM
Colombo (News 1st) அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனை கடந்துள்ளது. 2,066,508 பேர் இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, அமெரிக்காவில் இரண்டாவது கொரோனா அலை உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு 22 மாநிலங்களில் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் பின்புலத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் அமெரிக்காவில் 19,900 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று 977 உயிரிழப்புகள் பதிவாகியதுடன், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115,000 ஐ தாண்டியுள்ளது.